Advertisment

இளைஞர்களே பெண்கள் உங்களை காதலிக்கவில்லை என்றால் கால் பண்ணுங்கள் நான் கடத்தி வருகிறேன் என பேசிய பாஜக எம்.எல்.ஏ நீக்கம்!!

bjp mla

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மும்பையில் ''இளைஞர்களே கவலை வேண்டாம் உங்களை பெண்கள்காதலிக்கமறுத்தால் நான் கடத்தி வந்து தருகிறேன்'' என இளைஞர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ அம்மாநில பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Advertisment

மும்பை கட்கோபரில் உறியடிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் இளைஞர்கள் மத்தியில் பேசுகையில், ''இளைஞர்களே உங்களை பெண்கள் காதலிக்கவில்லை என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை நான் கடத்திவந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக்கூறி என்னுடையா மொபைல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள் எனவும் கூறி நம்பரை கொடுத்துள்ளார். பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த மும்பையில் பல இடங்களில் பாஜக எம்.எல்.ஏவின் இந்த செயலை கண்டித்துபோராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதேபோல் மாநில மகளீர் ஆணையம் 8 நாளில் இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனக்கூறி அவருக்குநோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் தேசிய மகளீர் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தலைமை அவரை மாநில செய்தி தொடர்பாளர் பதிவிலிருந்து நீக்கியுள்ளது மேலும்பொது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க கூடாது எனவும் அறிவுரை கூறியுள்ளது பாஜக தலைமை.

womenfreedomfighter women safety Speech MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe