ragul gandhi

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் 345 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38இடங்களில் முன்னிலை பெற்று இருக்கின்றனர்.இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர்.இதனால் ஆட்சி அமைக்க முடியாத சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது.இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கட்சி காரிய கமிட்டி முடிவெடுக்கும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment