ADVERTISEMENT

மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸிடம் கோரப்படும் டிஆர்எஸ் கட்சி அதிரடி!

09:33 AM May 15, 2019 | santhoshb@nakk…

மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவரும் , தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். அவர் ஒவ்வொரு மாநில கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களை சந்தித்து தொடர்ந்து ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.எஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரசூல் கான் மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க மாநில கட்சிகளின் எம்.பிக்களின் பெருபான்மை இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரப்படும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆனால் மத்தியில் தலைமை பொறுப்பை காங்கிரஸ் கட்சியிடம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார். மேலும் மத்தியில் ஆட்சியை வழி நடத்தும் பொறுப்பு மாநில கட்சிகளிடமே இருக்கும் என்பதில் டி.ஆர்.எஸ் கட்சி உறுதியாக இருப்பதாக ரசூல் கான் தெரிவித்துள்ளார். அதே போல் மூன்றாவது அணியின் பிரதமராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பான முழு அதிகாரம் மாநில கட்சிக்களிடையே இருக்கும் எனவும், மாநில கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கட்சி காங்கிரஸில் அங்கம் வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 180 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றப்படாத நிலையில் திமுக அந்த கூட்டணியில் இருந்தும் பயனிலை எனவும் , மூன்றாவது அணியில் உள்ள மாநில கட்சிகளின் கூட்டணியில் திமுக இணையும் என ரசூல் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT