Skip to main content

மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸிடம் கோரப்படும் டிஆர்எஸ் கட்சி அதிரடி!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவரும் , தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். அவர் ஒவ்வொரு மாநில கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களை சந்தித்து தொடர்ந்து ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.எஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரசூல் கான் மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க மாநில கட்சிகளின் எம்.பிக்களின்  பெருபான்மை இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரப்படும் என தெரிவித்துள்ளார்.

 

KCR

 

ஆனால் மத்தியில் தலைமை பொறுப்பை காங்கிரஸ் கட்சியிடம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார். மேலும் மத்தியில் ஆட்சியை வழி நடத்தும் பொறுப்பு மாநில கட்சிகளிடமே இருக்கும் என்பதில் டி.ஆர்.எஸ் கட்சி உறுதியாக இருப்பதாக ரசூல் கான் தெரிவித்துள்ளார். அதே போல் மூன்றாவது அணியின் பிரதமராக  யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பான முழு அதிகாரம் மாநில கட்சிக்களிடையே இருக்கும் எனவும், மாநில கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கட்சி காங்கிரஸில் அங்கம் வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 180 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றப்படாத நிலையில் திமுக அந்த கூட்டணியில் இருந்தும் பயனிலை எனவும் , மூன்றாவது அணியில் உள்ள மாநில கட்சிகளின் கூட்டணியில் திமுக இணையும் என ரசூல் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம்; வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட முதல்வர்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

Chandrashekar Rao released video clips deal between TRS MLAs join BJP

 

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க பேரம் பேச முயன்றதாகக் கூறி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ் (தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்களை இடைத்தரகர்கள் மூலம் விலைக்கு வாங்க பாஜக முயன்றதாகக் கூறப்பட்டது.

 

அதன்படி, டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த ரேகா காந்த ராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷ்வர்தன் ரெட்டி, பைலட் ரோகித் ரெட்டி ஆகிய நான்கு பேரிடம் இடைத்தரகர்கள் மூலம் பாஜக சார்பாக கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அந்த நான்கு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் சந்திரசேகர் ராவ் கூறியிருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ள நிலையில் இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்திருந்தது.

 

Chandrashekar Rao released video clips deal between TRS MLAs join BJP

 

இந்நிலையில், பாஜக, டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசும் வீடியோ ஆதாரங்களை சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ. 50 கோடி எனப் பேரம் பேசப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; தேசிய கட்சியை துவங்கும் சந்திரசேகர ராவ்

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

 

 Chandrasekhara Rao is planning to start a national party to face the 2024 Lok Sabha elections

 

கடந்த சில தினங்களாக 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜகவிற்கு எதிரான அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிரான கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசி வருகிறார். 

 

அந்தவகையில் அவர் பாஜகவில் இருந்து விலகிய பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், பாரதிய ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் என்றும் எதிர்க் கட்சிகளின் கூட்டணி தலைவர் பற்றிய அறிவிப்புக்கு தற்போது அவசரம் இல்லை என்றும் உரிய நேரத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

 

அந்த வகையில் வலுவான எதிரணியை உருவாக்க மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஹேமந்த் சோரன் போன்ற தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில்  கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.

 

இந்நிலையில், சந்திர சேகர ராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேசிய செயல் திட்டங்களுடன் கூடிய தேசிய கட்சியை துவங்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்த முடிவினை எடுக்க பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வர இருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தான் தொடங்க இருக்கும் புதிய கட்சியை போட்டியிட வைக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

பாரதிய ராஷ்டிரித் சமித், உஜ்வால் பாரத் கட்சி, நயா பாரத் கட்சி போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.