Asaduddin Owaisi

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று (12.10.2021) சாவர்க்கர் பற்றிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சாவர்க்கரை மகாத்மா காந்திதான் மன்னிப்பு கேட்கச் சொன்னார் என தெரிவித்தார்.

Advertisment

இதுதொடர்பாக அவர், "சாவர்க்கரைப் பற்றியபொய்கள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகின்றன. சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறுஅவர் பல கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்றுபரப்பப்படுகிறது. மகாத்மா காந்திதான் அவரைகருணை மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு கூறினார்" என தெரிவித்தார்.

Advertisment

alt="udanpirape " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="06248737-d546-4c1f-91c5-43d457926f32" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_38.jpg" />

இந்தநிலையில்ராஜ்நாத் சிங்கின் கருத்தைஅசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "அவர்கள் (பாஜக) திரிக்கப்பட்ட வரலாற்றை முன்வைக்கின்றனர். இது தொடர்ந்தால் மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு, மகாத்மா காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவரும், காந்தியின் கொலையில் சம்மந்தப்பட்டவர் எனநீதிபதி ஜீவன் லால் கபூரின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவருமான சாவர்க்கரை தேசத்தந்தை ஆக்கிவிடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.