புதுச்சேரியில் வாணிஜ்ய சாப்தா என்ற பெயரில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர், ''புதுவை அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக மீண்டும் தொழிற்சாலைகள் செயல்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு சரியான சலுகைகளைக் கடந்த காலங்களில் வழங்காததால் புதுவையைவிட்டே பல தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டன. இப்படி இருந்தால் எப்படி தொழில் வளர்ச்சி வரும். வருங்காலங்களில்ஏற்றுமதியின் அளவை4 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்'' என்றார்.