இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரோனா இரண்டாவது அலையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து மூன்றாவது அலையை கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்ட ஆய்வு ஒன்று, அடுத்த 30 நாட்களில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திவிட்டால், மூன்றாவது அலை ஏற்பட்டாலும் உயிரழப்புகளை 75 சதவீதம் வரை குறைக்கலாம் என தெரிவிக்கிறது.
கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்படலாம் எனவும், மூன்றாவது அலையின்போது தினமும் ஒரு லட்சம் கரோனா பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் ஐ.சி.எம். ஆர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.