துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பீசா, பர்கர் போன்ற வெளிநாட்டு உணவுகளைவிட பெரியது நம்மூர் இட்லி சாம்பார், தோசைதான். அதேபோல கோவா மீன் குழம்பை சாப்பிட்டால், அதன் டேஸ்டிற்கு நம்மை அடிமையாக்கிவிடும். இந்த உணவுகள் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது என்று கோவாவில் உள்ள என்ஐடி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசியுள்ளார்.
மேலும், உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த நாகரிகத்தில் இந்திய நாகரிகமும் ஒன்று, தற்போது உயிருடன் இருப்பதும் நம் நாகரிகம்தான். பல நாகரிகங்கள் இருந்துள்ளது. ஆனால் தற்போது அதன் நிலை என்ன? இந்திய நாகரிகத்தின் நிலை என்ன? என்று அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.