Advertisment

வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ள கருவி: ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல்!

corona home test kid

இந்தியாவில் கரோனாபாதிப்பு தற்போது குறைந்துவருகிறது. கரோனா இரண்டாவது அலையின்தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். மேலும், காரனோவை எதிர்கொள்வதற்கு பரிசோதனைகளை அதிகரிப்பது அவசியம் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில்,வீட்டிலேயேகரோனாபரிசோதனை செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கருவி மூலம் 15 நிமிடங்களுக்குள் கரோனாபரிசோதனை செய்து, முடிவை தெரிந்துகொள்ளலாம். இதன்விலை 250 ரூபாயாகும். புனேவைச்சேர்ந்தமைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்துள்ளது.

Advertisment

வீட்டிலேயே கரோனாபரிசோதனை செய்துகொள்ளும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவியை, கரோனாஅறிகுறி உள்ளவர்களும், கரோனாபாதிக்கப்பட்டவர்களோடுதொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்தக் கருவியைப் பயன்படுத்திச் செய்யும் சோதனையில் கரோனாபாசிட்டிவ் என்றால் கரோனாஇருப்பது உறுதியென்றும், ஒருவேளை நெகடிவ் என்றால் உடனே அவர்கள் ஆர்.டி - பி.சி.ஆர்சோதனை செய்துகொள்ளவேண்டுமென்றும்கூறியுள்ளது. மேலும் சோதனை முடிவுகள் தங்களது சர்வரில் மிக இரகசியமாகபாதுகாக்கப்படும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம்தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய கருவி மூலம் வீட்டிலேயே கரோனாபரிசோதனை செய்துகொள்ள, அதற்கான செயலியைகூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் செயலியில் கூறியுள்ளபடி சோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு அதற்கான முடிவு செயலிலேயே காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR corona testing corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe