Advertisment

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா ப்ளஸ்; நடைபெறும் ஆய்வு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

union health minister

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கரோனா பரவல், கோவாக்சின் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

Advertisment

கோவாக்சின் தடுப்பூசி குறித்துப் பேசிய மன்சுக் மாண்டவியா, உலக சுகாதார நிறுவனத்தின் இரண்டாவது குழு இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தின் அடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ளார். அதேபோல் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு, "பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கூடுதல் தரவுகள் கேட்கப்பட்டுள்ளது. மதிப்பாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இணை நோயுள்ள குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசியைச் செலுத்தலாம். மேலும் விரிவான பகுப்பாய்வு தேவை" எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

பிரிட்டனில் சமீபகாலமாக டெல்டா ப்ளஸ் வகை கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தநாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10-ல் ஒருவரை டெல்டா ப்ளஸ் கரோனா தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து, இந்த வகை கரோனாவைத்தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இந்த டெல்டா ப்ளஸ் வகை கரோனா, டெல்டா வகை கரோனாவை விட அதிகம் பரவும் தன்மையைக் கொண்டதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில் இந்தியாவின் மஹாராஷ்ட்ராவிலும், மத்தியப் பிரதேசத்திலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த டெல்டா ப்ளஸ் கரோனா பரவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவை இந்த திரிபை (டெல்டா ப்ளஸ்) ஆய்வு செய்கின்றன. இதன் தொற்றும் தன்மை மற்றும் பரவல் தன்மை குறித்த எனது கருத்துகள் சரியாக இருக்காது" எனக் கூறியுள்ளார்.

covaxin union health minister mansukh mandaviya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe