ADVERTISEMENT

மத்திய அரசின் முடிவைப் பொறுத்து அவசர அனுமதி... கரோனா தடுப்பூசி குறித்து ஐ.சி.எம்.ஆர்...

05:39 PM Aug 20, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு முடிவு செய்தால், கரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதியளிப்பது குறித்துப் பரிசீலிக்கிறோம் என ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இந்தியாவிலும் பாரத் பயோடெக், கேடிலா, சரம் ஆகிய நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்தைப் பரிசோதித்து வருகின்றன. இந்தச் சூழலில், நேற்று உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் பல்ராம் பார்கவா அளித்த விளக்கத்தில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து, இரண்டாவது கட்டசோதனை முடியும் நிலையில் இருக்கிறது. மத்திய அரசு முடிவு செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்துப் பரிசீலிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT