ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் தூத் இருவரும் மும்பையில் உள்ள அமலாக்க துறை முன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/icici-in_1.jpg)
நேற்று அமலாக்குத்துறை, சந்தா கோச்சார் மற்றும் தூத் ஆகியோர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று இவர்கள் இருவரும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்திவந்த நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது.
அதற்காக வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டிருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து சந்தா கொச்சார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.
அதன்பின் சந்தா கோச்சார், அவரது கணவர் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தது.
அதன் பின் பிப்ரவரி 22-ம் தேதி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் மற்றும் வி.என்.தூத் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து சிபிஐ லுக் அவுட் நோட்டிஸை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)