ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்திவந்த நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது.அதற்காக வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டிருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து சந்தா கொச்சார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/icici-in_2.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதன்பின் சந்தா கோச்சார், அவரது கணவர் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. மேலும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறை விசாரித்த போது, வங்கி சார்ந்த விஷயங்கள் எதையும் தனது கணவரிடம் ஒருபோதும் விவாதித்தது கிடையாது என்று சந்தா கோச்சார் கூறியுள்ளார். அதேபோல வங்கி மூலம் கடன் அளித்ததற்கு எந்த பிரதிபலனையும் ஒரு போதும் பெற்றது கிடையாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனது கணவரின் தொழில் பரிவர்த்தனைகள் குறித்த விவரம் எதுவும் தனக்குத் தெரியாது என்றும் சந்தா கோச்சார் தெரிவித்துள்ளார்.
வீடியோகான் நிறுவனத்துக்கு தகுதியின் அடிப்படையில்தான் கடன் வழங்கப்பட்டது என்று தெரிவித்த அவர், 2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரையான காலத்தில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதை பரிசீலிக்கும் குழு உரிய வகையில் பரிசீலித்த பிறகே கடன் வழங்க ஒப்புதல் அளித்தது என்றும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)