Skip to main content

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7- விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்தது.

 

 

ICC WORLD CUP IND VS SL MATCH INDIA TEAM WIN WORLD CUP MATCH

 

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 43.3 ஓவரில் 265 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 103 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அதே போல் லோகேஷ் ராகுல் 111 ரங்களுடன் களத்தில் உள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பான முறையில் மெசேஜ் அனுப்பியவர்களுக்கு மேக்ஸ்வெல் மனைவி பதிலடி

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

'For those who send hate messages...' - Australia cricketer Maxwell's wife explains

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தோற்றதால், அத்தோல்வி ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதே வேளையில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியா அணி வீரரான மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், தனக்கு எதிராக ரசிகர்கள் சிலர் வெறுப்புடன் மெசேஜ்களை அனுப்புவதாக வினி மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வெறுப்புடன் தனிப்பட்ட முறையில் எனக்கு மெசேஜ் அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தையின் அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்சனைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

“இந்திய அணியின் மன உறுதி பாராட்டுக்குரியது” - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

"The morale of the Indian team is commendable" - Tamil Nadu Chief Minister M. K. Stalin

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

இந்த போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதனை தொடர்ந்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இதன் மூலம் 6ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.

 

இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்திய கிரிக்கெட் அணியின் மன உறுதியும் ஆர்வமும் பாராட்டுக்குரியது. அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டி வரை சென்று இந்திய அணிக்கு வாழ்த்துகள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.