Skip to main content

'10 மாதம்... 90 ஆக்கிரமிப்பு... அரசியல்வாதிகளின் கோபம்' பழிவாங்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தவர், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மருத்துவர் ரேணு ராஜ். தற்போது தேவி குளம் பகுதியில் உதவி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

jkl



தமிழக எல்லைக்கு அருகில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகில் தேவிகுளம் என்ற சிறிய மலைப்பகுதி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதிகளில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மீது எடுத்துவந்த நடவடிக்கையே, தற்போது அவரது டிரான்ஸ்ஃபருக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 10 மாதத்திற்கு முன்புதான், தேவிகுளத்தின் உதவி கலெக்டராக ரேணு ராஜ் பதவியேற்றார். அப்போது முதல் அங்கு விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்துவந்தார். 90க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக்களை அவர் அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

 

hjkl



இவரின் நடவடிக்கையை கேரள உயர்நீதிமன்றம் பாராட்டி வந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை இவர் சம்மாதித்தார். தற்போது அதுதான் விஸ்வரூபமாக உருவெடுத்து, அவர் டிரான்ஸ்ஃபர் ஆக காரணமாக மாறியது. தேவிகுளம் மற்றும் மூணாறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உதவி ஆட்சியர்கள் 16 பேர், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்போது ரேணு ராஜூவும் அதில் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
IAS officers job transfer!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த முருகேஷ் வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர்க்கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த நடராஜன் ஐஏஎஸ், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக முதன்மைச் செயலராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ், வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியை பணியிட மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கற்பகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Next Story

16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Transfer of 16 IAS Officers-Tamil Govt

 

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தலைமைச் செயலாளராக இருந்த அபூர்வா ஐஏஎஸ் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றிய கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 

அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த ஜெயசீலன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜான் லூயிஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் செல்வகுமார், ஹிதீஷ் குமார், லில்லி, கிரண், பூங்கொடி, நந்தகோபால் பழனிசாமி, கணேசன் சரவணவேல்ராஜ் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.