தேர்வறைக்கு தாமதமாக சென்ற மாணவர், தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதாக தற்கொலை செய்துள்ளார்.

Advertisment

Suicide

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் வருண். இவர் டெல்லியில் கடந்த பல ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தன்னை தயார் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்வுக்கு வருண் தாமதமாக சென்றதாக தெரிகிறது. இதனால், தேர்வறை கண்காணிப்பாளர் அவரை தேர்வெழுத அனுமதிக்கவில்லை. அவரிடம் பலமுறை கெஞ்சியும் முயற்சி வீணானதால் மனமுடைந்த வருண், அழுதபடியே வீட்டிற்கு சென்றுள்ளார்.

Advertisment

அவரைப் போலவே தேர்வெழுதச் சென்ற தோழி, தேர்வு முடிந்தபின் வருணைத் தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. நேரடியாக வீட்டிற்கு சென்றபோது வருண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக வருண் எழுதியுள்ள கடிதத்தில், தான் தோற்றுவிட்டதாகவும், தனது பெற்றோர் தன்னை மன்னிக்கவேண்டும் எனவும் எழுதியுள்ளார்.