கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து வெளியாகும் சிராஜ் என்கிற தினசரி மலையாள பத்திரிகையின் முதன்மை நிருபராக பணியாற்றி வந்தார் முகமது பஷீர். இவர் நேற்று இரவு திருவனந்தபுரம் பாளையம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே படுவேகமாக வந்த கார் ஒன்று அவரை மோதியது. அது தூக்கி வீசப்பட்டார். முகமது பஷீர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து திருவனந்தபுரம் விசாரணை செய்ததில் காரை ஓட்டி வந்தவர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் என்கிற ஐஏஎஸ் அதிகாரி. இவர் நில அளவை துறையின் இயக்குநராக பணியில் இருப்பவர்.
சம்பவத்தின்போது இவர் தனது பெண் நண்பருடன் காரில் வந்திருக்கிறார். காரை வேகமாக ஓட்டியதால் அதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் காரை இயக்கும்போது போதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகின. இதை அறிந்த கேரள முதல்வர் பிரணாய் விஜயன், பத்திரிகையாளர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அதில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர். மேலும், நாளைய தினம் திருவனந்தபுரம் பத்திரிகையாளர் மன்றம் மறைந்த பத்திரிகையாளர் முகமதுபஷீருக்கு அனுதாப கூட்டம் நடக்கவிருக்கிறது.