ஜம்முவை சேர்ந்த பெண் டாக்டர்"ஸ்வட்ச் பாரத்" திட்டத்திற்காக தன் கணவரிடம் விவகாரத்தினால்தனக்கு ஜீவனாம்சமாக வந்த 45 லட்ச ரூபாய் பணத்தை அளித்துள்ளார்.
ஜம்முவை சேர்ந்த பெண் டாக்டர்.மேகாமகாஜன் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்றார். அதற்காகஅவர் கணவரிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜீவாம்சமாக 45லட்ச ரூபாய் வந்தது.
அதனை மோடியின் தூய்மை இந்தியா திட்டமான"ஸ்வட்ச்பாரத்" திட்டத்திற்கு அளித்துள்ளார். இதை பற்றி டாக்டர்.மகாஜன்"நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ரசிகை. அவர் இந்தியாவிற்காக செயல்படும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. அதனால்தான் இந்த பணத்தை ஸ்வட்ச் பாரத்திற்கு அளித்தேன்.நான் பணம் கொடுத்ததற்கு இதுதான் காரணம் என கூறியுள்ளார்.