Advertisment

இந்திய விமானப்படை விமானம் வெடித்ததில் இந்திய வீரர்கள் பலி...

ghgjghjgh

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் பட்காம் பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்துள்ளது. காஷ்மீர் பகுதியில் உள்ள இந்த நிகழ்வில் இந்திய வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு தொழிநுட்ப கோளாறே காரணமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இது குறித்து ஆராய இந்திய விமானப்படையின் தொழில்நுட்ப குழு அந்த பகுதிக்கு விரைந்துள்ளது.மேலும் விபத்துக்குள்ளான வானுறத்தி எம்17 ரக போக்குவரத்துக்கு வானுர்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ நகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டு, பயணிகள் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Pakistan jammu and kashmir pulwama attack
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe