கடும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்கிறார்.

Advertisment

காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், ஜாபர் ஷெரீப், சிதம்பரம் உள்ளிட்டோர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ள இருக்கும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது அவரது மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட்டரிலும் ட்வீட் செய்துள்ளார்.

rss

பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன, ஆனால் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எனக்கு என்ன பேச தோனுகிறதோ பேசுவேன் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனிடையே விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்றே நாக்பூர் வந்து சேர்ந்துவிட்டார். இன்று ஐந்து மணியளவில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.