Advertisment

கோமா-வில் இருந்து மீண்டு வீடு திரும்பிய வாவா சுரேஷ்

c

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ். இவர் பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்பு உள்ளிட்டஅரியவகை பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.

Advertisment

இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வாவா சுரேஷை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவாவா சுரேஷ் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாகவும், மோசமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். மேலும், தான் உயிருள்ள வரை பாம்புகளை மீட்பேன் என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

snake
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe