Advertisment

”இது நடக்கவில்லை என்றால் என் தொழிலையே விட்டுவிடுகிறேன்" - பிரசாந்த் கிஷோர் சவால்!

prashant kishor

மேற்கு வங்கத்தில் வருகிறமார்ச்27 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பேபரபரப்பாக இருந்து வந்ததேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமெனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

Advertisment

இந்தநிலையில் மேற்கு வங்கமுதல்வரின் தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றி வரும் பிரசாந்த் கிஷோர், அம்மாநில சட்டமன்றத் தேர்தலில்பாஜக100க்கும் மேற்பட்ட தொகுதிகளைவென்றால், தேர்தலுக்கு வியூகம் அமைக்கும்தொழிலையேவிட்டுவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து ஆங்கிலதனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்பிரசாந்த்கிஷோர், பாஜகமேற்கு வங்கத்தில் 100 சீட்டுகளுக்கு மேல் வென்றால், நான் இந்த தொழிலையேவிட்டுவிடுகிறேன். ஐ-பேக்கையும் விட்டுவிடுகிறேன். நான் வேறு எதாவது தொழில் செய்வேன். இந்த வேலையைச் செய்யமாட்டேன். நான் வேறு ஒரு தேர்தல் பிரச்சாரத்தைமேற்கொள்வதைநீங்கள் காணமாட்டீர்கள்" எனத்தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee west bengal Prashant Kishor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe