bjp mla

Advertisment

இந்தி நடிகை இறந்துவிட்டதாக ட்வீட் போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பாஜக எம்.எல்.ஏ ராம் கதம்.

மும்பை கட்கோபரில் உறியடிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ ராம் கதம் இளைஞர்கள் மத்தியில் பேசுகையில், ''இளைஞர்களே உங்களை பெண்கள் காதலிக்கவில்லை என்று சொன்னால் என்னிடம் சொல்லுங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை நான் கடத்திவந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக்கூறி என்னுடையா மொபைல் நம்பரை குறித்துக்கொள்ளுங்கள் எனவும் கூறி நம்பரை கொடுத்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த மும்பையில் பல இடங்களில் பாஜக எம்.எல்.ஏவின் இந்த செயலை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது இந்த சர்ச்சையே இன்னும் தீராத நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே இறந்துவிட்டதாக அவர் டிவிட் போட்டு இன்னொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Advertisment

bjp mla

சமூகவலைத்தளங்களில் வந்த போலியான செய்தியை உறுதிசெய்யாமல் இப்படி அவர் செய்துள்ளதாக அவரை இணையவாசிகள் கிண்டலடிக்க உடனே அந்த பதிவை நீக்கினார் ராம் கதம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வந்த போலியான செய்தியை நம்பி அவ்வாறு செய்துவிட்டேன் என கேட்டுக்கொண்ட கதம் சோனாலி பிந்த்ரே விரைவில் சிகிச்சை பெற்று நலமடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.