உயிருள்ள வரை பாம்புகளை பிடிப்பேன் - மீண்டு வந்த வாவா சுரேஷ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ். இவர் பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்பு உள்ளிட்டஅரியவகை பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வாவா சுரேஷை பாம்பு கடித்தது. கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாவா சுரேஷ் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாகவும், மோசமான நிலையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனாக முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாவா சுரேஷ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது அவர்களது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'தான் உயிருடன் இருக்கும்வரை பாம்புகளை பிடிப்பேன். மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவேன்' என வாவா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Kerala snake
இதையும் படியுங்கள்
Subscribe