ரகத

ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. அண்மையில் இணையத்தில் வெளியான இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை கடந்த சில நாட்களாக சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில், அயோத்தியை சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, ஷாருக்கானை நான் நேரில் பார்த்தால் உயிரோடு அவரை எரித்து விடுவேன்; இல்லை வேறு யாராவது எரித்தால் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பதான் திரைப்படம் ஓடும் தியேட்டர்களை எரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.