'கடைசியா உன்னை பார்க்கணும்';உயிரைவிட்ட காதலன்; காதலிக்கு நேர்ந்த துயரம்

'I want to see you one last time'

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலித்து வந்த பெண் பேச மறுத்ததால் காதலன் பட்டாகத்தியால் காதலியை தாக்கவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தவர் விர்ஜின் ஜோஸ்வா. இவர் அதேபகுதியில் கலை கல்லூரியில் படித்து வந்த டெனிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். தொடர்ந்து டெனிஷாவை தொடர்பு கொண்ட ஜோஸ்வா தன்னை கடைசியாக பார்க்க வருமாறும், அப்படி வந்தால் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை டெலிட் செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி தென்னந்தோப்பு ஒன்றுக்கு டெனிஷா சென்றுள்ளார். அப்பொழுது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாக்கத்தியால் டெனிஷாவை ஜோஸ்வா கொடூரமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தஅவரை அப்பகுதி மக்கள் மீட்டுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரம் அங்கிருந்து தப்பி ஓடிய ஜோஸ்வா ரயில் ஒன்றின் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident Kanyakumari love police
இதையும் படியுங்கள்
Subscribe