Advertisment

கோலியையும், இந்திய அணியையும் பார்க்க வேண்டும்-விஜய் மல்லையா வேண்டுகோள்   

kholi

இந்திய வங்கிகள் பலவற்றில் 9000கோடிக்கும் மேல் கடன் பெற்றுவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் அவரை தேடப்படும் குற்றவாளியாக இருப்பவரை, அழைத்துவர இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. இந்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அவர் ஜாமீனில் இருக்கிறார்.

Advertisment

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் விளையாடிவிட்டு, தற்போது டெஸ்ட் போட்டிகள் விளையாடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே விராட் கோலி மற்றும் அவரது தலைமையிலான இந்திய அணி வீரர்களை இந்த மாதத்தில் சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விஜய் மல்லையாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. இந்திய அணியை விஜய் மல்லையா சந்தித்தால் ஏற்படும் பெரும் சர்ச்சையை தவிர்க்கவே கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்திய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆர் சி பி அணியின் கேப்டன் இந்திய அணியின் கேப்டான் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஏற்கனவே இங்கிலாந்து ரசிகர்களிடம் விராத் கோலி புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் பரவும் போது, அந்த புகைப்படத்தில் விஜய் மல்லையா போன்று ஒருவர் இருக்கிறார் என்று சர்ச்சைகள் கிளப்பப்பட்டது. தற்போது விஜய் மல்லையாவே இவ்வாறு வேண்டுகோள் விட்டிருப்பதால் மேலும் சர்ச்சையாகியுள்ளது.

vijay malaya Bank fraud virat kholi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe