Skip to main content

கோலியையும், இந்திய அணியையும் பார்க்க வேண்டும்-விஜய் மல்லையா வேண்டுகோள்   

Published on 04/08/2018 | Edited on 04/08/2018

 

kholi

 

இந்திய வங்கிகள் பலவற்றில் 9000கோடிக்கும் மேல் கடன் பெற்றுவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் அவரை தேடப்படும் குற்றவாளியாக இருப்பவரை, அழைத்துவர இந்திய அரசாங்கம் பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது. இந்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அவர் ஜாமீனில் இருக்கிறார்.

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20, மூன்று ஒருநாள் விளையாடிவிட்டு, தற்போது டெஸ்ட் போட்டிகள் விளையாடிக்கொண்டிருக்கிறது.  இதனிடையே விராட் கோலி மற்றும் அவரது தலைமையிலான இந்திய அணி வீரர்களை இந்த மாதத்தில் சந்திக்க விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விஜய் மல்லையாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. இந்திய அணியை விஜய் மல்லையா சந்தித்தால் ஏற்படும் பெரும் சர்ச்சையை தவிர்க்கவே கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்திய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆர் சி பி அணியின் கேப்டன் இந்திய அணியின் கேப்டான் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே இங்கிலாந்து ரசிகர்களிடம் விராத் கோலி புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளத்தில் பரவும் போது, அந்த புகைப்படத்தில் விஜய் மல்லையா போன்று ஒருவர் இருக்கிறார் என்று சர்ச்சைகள் கிளப்பப்பட்டது. தற்போது விஜய் மல்லையாவே இவ்வாறு வேண்டுகோள் விட்டிருப்பதால் மேலும் சர்ச்சையாகியுள்ளது.          

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லாத்துலயும் ‘நம்பர் 1’ தான்; விராட்டின் புதிய சாதனை

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Not just cricket but 'No. 1' in everything; Virat's new record

 

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி நடப்பு தொடரில் 639 ரன்களை விளாசியுள்ளார். அதில் 2 சதங்களும் அடக்கம். 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 53.25 சராசரியுடன் நடப்பு சீசனில் அவர் விளையாடியுள்ளார். 

 

மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதமடித்தவர் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதுவரை விராட் 7 சதங்களை பதிவு செய்துள்ளார். இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெயில் 6 சதங்களை அடித்துள்ளார். தொடர்ந்து அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலிலும் விராட் முதலிடத்தில் உள்ளார். 

 

ஐபிஎல் தொடரில் இருந்து அவரது அணி வெளியேறிய பின் தற்போது அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது லண்டன் சென்றுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னை முழுமூச்சில் தயார்படுத்தி வருகிறார். 

 

ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெறவில்லை என்றாலும் கூட இரண்டு நாட்கள் இணையத்தை கலக்கினார் கோலி. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் 1601 பதிவுகளுடன் 250 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்கிற பெருமையைப் பெறுகிறார்.


 

 

 

Next Story

வாடிக்கையாளரிடம் ரூ. 36 லட்சத்தை மோசடி செய்த வங்கி மேலாளர்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

customer amount Rs 36 lakh cheated bank manager sivaganga

 

வாடிக்கையாளரிடம் ரூபாய் 36 லட்சத்தை மோசடி செய்த வங்கி மேலாளர் தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்  அல்லா ஹையர். இவர் தனக்கு சொந்தமாக இருந்த  நிலத்தை விற்று பல லட்சம் பணம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அல்லா ஹையர் வழக்கம் போல் காலை நேரத்தில் நடைபயிற்சிக்கு செல்லும்போது அதே தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.  தேசிய மயமாக்கப்பட்ட பிரபல தனியார் வங்கியின் மேலாளராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வந்துள்ளார்.

 

அல்லா ஹையரும், பாலகிருஷ்ணனும் நெருங்கி பழகி வந்த நிலையில் அல்லா ஹையர் தன்னுடைய குடும்ப கஷ்டங்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். நான் இப்போது வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன். என்னுடைய நிலத்தை விற்பனை செய்த பணத்தை வைத்து என்ன தொழில் தொடங்கலாம் என்று பாலகிருஷ்ணனிடம் யோசனை கேட்டுள்ளார்.

 

அப்போது, நிலம் விற்ற பணத்தை தங்களது வங்கியில் டெபாசிட் செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரின் ஆசை வார்த்தையை நம்பிய  அல்லா ஹையர், அவரிடம் சுமார் ரூ. 36 லட்சம் பணத்தை கொடுத்ததுடன் 50 பவுன் தங்க காசுகளையும் ஒப்படைத்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல, அல்லா ஹையருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல், வாங்கிய 36 லட்சம் பணத்தையும் 50 பவுன் தங்க காசுகளையும் திருப்பித் தராமல் மேலாளர் பாலகிருஷ்ணன் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. 

 

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அல்லா ஹையர், பாலகிருஷ்ணன் மீது சிவகங்கை எஸ்.பி செந்தில்குமாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்,  பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.