Advertisment

'தமிழ் கற்க வேண்டுமென முயற்சி செய்தாலும் முடியவில்லை'- மன் கி பாத்-ல் மோடி வேதனை!

'I tried to learn Tamil but could not succeed' - Modi

தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் அல்லது அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் எப்போது தமிழகம் வந்தாலும் பிரதமர் மோடி தமிழில் பேசுவது வழக்கம்.அதேபோல் பாரதியார் கவிதைகளையும், திருவள்ளுவரின்திருக்குறளையும், அவ்வையாரின் பாடல்களையும் மேற்கோள் காட்டி பேசுவதையும் அவர் வழக்கமாக செய்து வருகிறார். கடைசியாக அரசு நலத்திட்டங்களை துவங்கி வைக்க தமிழகம் வந்த பிரதமர் மோடி அவ்வையாரின் ''வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்'' என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், '' தமிழ் கற்க வேண்டுமென நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை . இந்த உலகத்திலேயே மிக அழகான மொழிகளில் தமிழும் ஒன்று.என்னால் தமிழ்சரியாக கற்க முடியவில்லை'' என பேசியுள்ளார்.

Advertisment

Central Government Tamil language modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe