நேற்று போரா இசுலாமியர்கள் நடத்திய ஆன்மீக கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர், போரா சமுகத்தை பற்றி பெருமையாக பேசினார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை பற்றி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,” இந்தூரில் இருக்கும் சையீப் மசூதியில் காட்டிய அன்பை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.