
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்இன்று பதவி ஏற்றார். 78வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்பது பெருமைக்குரியவர்.அதேபோல் இந்தியாவை பூர்வீகமாக கொண்டகமலா ஹாரிஸும் துணை அதிபராகபதவி ஏற்றுக்கொண்டார். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்,ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குஇந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இருநாட்டு உறவை மேலும் பலப்படுத்த ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன். சவால்களை எதிர் கொள்வதிலும், உலகளாவிய அமைதி, பாதுகாப்பைமுன்னேற்றுவதிலும்ஒற்றுமையுடன் செயல்படுவோம். வளர்ந்து வரும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல் துணை அதிபராக பதவி ஏற்றிருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கமலா ஹாரிஸ் பதவியேற்றது சிறப்புமிக்க தருணம் என தெரிவித்துள்ளார்.
Follow Us