Advertisment

“எனது ஹோட்டல் அறையில் கூட ப்ரைவசி இல்லை” - விராட் கோலி வேதனை

“I have no privacy even in my hotel room” – Virat Kohli anguish

8 ஆவது டி20 உலகக்கோப்பை தொடரில்பங்கேற்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அவர் அறையில் இல்லாத போது அவரது அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அவரது அறையினை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சியில் அவர் பயன்படுத்தும் பொருட்கள், அவரது காலணிகள், விராட் வழிபடும் சிலைகள் மற்றும் அவர் பயன்படுத்தும் உபகரணங்கள் ஆகியவையும் காணக் கிடைக்கின்றன.

Advertisment

இது சமூக ஊடகங்களில் வெளியானதும் மக்களால் வேகமாகப் பகிரப்பட்டது. இந்த வீடியோ பதிவினை கண்ட விராட் கோலி, “ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டு வீரர்களைக் காணும் போது மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் இது எனது தனிப்பட்ட விஷயத்தில் குறுக்கிடும் செயல். எனது ஹோட்டல் அறையில் கூட எனக்கான தனியுரிமை (ப்ரைவசி) இல்லை எனில் அதை வேறு எங்கு நான் எதிர்பார்க்க முடியும்.

Advertisment

ரசிகர்களின் இந்த செயலில் எனக்கு உடன்பாடு இல்லை. முற்றிலும் இது தனியுரிமையை மீறும் செயல். தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள் அவர்களை பொழுது போக்கிற்கான பண்டமாக மட்டுமே பயன்படுத்தாதீர்கள்” எனத்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து பல்வேறுபிரபலங்களும் விராட் கோலிக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களைத்தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், “இது அபத்தமானது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” எனத்தெரிவித்துள்ளார்,

hotel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe