pragya thakur

Advertisment

இந்தியாவில் கரோனா பரவல் ஆரம்பித்ததிலிருந்து, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முதல் மாநில எம்.எல்.ஏக்கள் வரை கரோனா குறித்தும், அதை விரட்டுவது குறித்தும் மருத்துவ உலகமே வியக்கும் வண்ணம் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட அக்கட்சியைச் சேர்த்த முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், கரோனாவும் நம்மைப் போன்ற உயிர்தான். அதற்கும் வாழ உரிமை இருக்கிறது எனத் தெரிவித்தார். இது விமர்சனத்திற்கும் உள்ளானது.

இந்தநிலையில் பாஜகவைச் சேர்ந்த மக்களவை எம்.பி பிரக்யா தாக்கூர், தினமும் தான் கோமியத்தைக் குடிப்பதால் தனக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாம் தினமும் கோமியத்தைக் குடித்தால், அது கரோனாவினால் ஏற்படும் நுரையீரல் தொற்றை குணப்படுத்தும். நான் மிகவும் வலியில் உள்ளேன், இருப்பினும் நான் தினமும் கோமியத்தைக் குடிக்கிறேன். அதனால் இப்போது, கரோனாவிற்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. எனக்கு கரோனாவும் இல்லை" எனக் கூறியுள்ளார்.