உபி மாநிலம் ஜபால்பூர் தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக எம்.எல்.ஏ ரன்வீர் சிங், ‘நான் பிரதமர் மோடியை செய்வதைப் போல சாதி அரசியலில் ஈடுபடமாட்டேன். யார் முஸ்லீம், யார் இந்து என்று நான் பார்க்கமாட்டேன். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், தாங்கள் கஷ்டப்படுவோம் என்று இஸ்லாமிய சகோதரர்கள் நினைக்கின்றனர்’ என்று கூறினார். இதில் மோடி போல சாதி அரசியல் செய்யமாட்டேன் என்று இவர் சொன்னது மிகப்பெரிய சர்ச்சையானது.
இந்நிலையில் ரன்வீர் சிங், சிலர் வேண்டுமென்ற வீடியோவை பரப்பிவிட்டனர். நான், பிரதமருக்கு எதிராக இந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. சிலர், வேண்டுமென்ற எனக்கு எதிராக சித்தரித்துள்ளனர்’ என்று தெரிவித்திருக்கிறார்.