Advertisment

“மகாலட்சுமிக்குத் தலைவணங்குகிறேன்” - பிரதமர் மோடி!

I bow to Mahalakshmi PM Modi

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31.01.2025) காலை தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து நாளை (01.02.2025) மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

Advertisment

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு (2024) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை (6வது முறை) தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலையடுத்து கடந்த ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை (7வது முறை) தாக்கல் செய்தார். இதன் மூலம் 8வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

Advertisment

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “செல்வம் மற்றும் செழுமைக்கான தெய்வமான மகாலட்சுமிக்குத் தலைவணங்குகிறேன். எங்கள் நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மகாலட்சுமி தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மிகவும் பெருமைக்குரியது.

உலக பீடத்தில் இந்தியா தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எனது மூன்றாவது ஆட்சியின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். வரும் 2047ஆம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​இந்தியா தனது விக்சித் பாரத் (வல்லரசு) நோக்கத்தை நிறைவேற்றும் என்றும், இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும். இதற்காக 140 கோடி இந்தியர்கள் தங்கள் கூட்டு முயற்சியால் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புகிறேன். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe