Advertisment

”நான் தென்னிந்தியாவை சேர்ந்தவன்...” - பாக். ராணுவத்தினரின் விசாரணையில் அபிநந்தன் சொல்வதாக இணையத்தில் பரவும் வீடியோ

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனையடுத்து நடத்தப்பட்டு வரும்தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட வீடியோ இன்றுவெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அபிநந்தன் தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதனை அடுத்து வெளியான வீடியோவில் ரத்த காயத்துடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் காட்சிகள் வெளியானது.

Advertisment

SS

அதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், அவர் தேநீர் அருந்தி கொண்டு பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில் நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற கேள்விக்கு ''நான் தென்னிந்தியாவை சேர்ந்தவன்'' என உறுதியாக பதிலளிக்கிறார் அபிநந்தன். மற்ற கேள்விகளுக்குபதில் கூற மறுத்துவிட்டார். தற்போது அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

airforce indian army Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe