Advertisment

'நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' - மோடி உரை!

modi

வேளாண் சட்டங்களைரத்துசெய்யக் கோரிக்கடந்தஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகபஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ''விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சரியான விதைகள், உரம், பயிர் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாயச் சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

Advertisment

வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் முயற்சிகளைசெய்தும் வேளாண் சட்டங்களின் நலனை விளக்குவதில் வெற்றிபெற முடியவில்லை. வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு எனக் கருதுகிறேன். வேளாண் சட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேளாண் துறைக்குப் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்கக் குழுக்கள் அமைக்கப்படும். அக்குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெறுவர். விவசாயிகள் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன்'' என்றார்.

Delhi Farmers modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe