Advertisment

நான் பூரண நலமுடன் இருக்கிறேன்! - கேரள முதல்வர் பினராயி விஜயன்

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

Pinarayi

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த மார்ச் 2ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், பல்வேறு வதந்திகளும் உடனே கிளம்பின.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் செயல்பட்டு வரும் பினராயி விஜயன் தனது நிகழ்ச்சிகள், உரை என பலவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருபவர். ஆனாலும், இந்த சிகிச்சை குறித்து தெரிவிக்காததும் இதற்குக் காரணம்.

Advertisment

இந்நிலையில், நேற்று மாலை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கிளம்பிய பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘கடந்த 15 ஆண்டுகளாக நான் எடுத்துவரும் சாதாரண சோதனைதான் இது. எனக்கு எதிரான சிலர் தவறான தகவல்களைப் பரப்பி விட்டிருக்கின்றனர். நான் பூரண உடல்நலனுடன் இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என தெரிவித்தார். அவரோடு அவரது மனைவி கமலாவுடம் உடனிருந்தார்.

meets with Pinarayi Vijayan Pinarayi vijayan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe