deva gowda

Advertisment

மதசாற்பற்ற ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக இருக்கும் தேவ கௌடா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

1956ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியவர். ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்து இருக்கிறார்.

1996-ல் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்திய பிரதமராக பொறுப்பேற்றார். அதேபோல, 1994-1996 ஆம் ஆண்டுகளில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கர்நாடக மாநில முதல்வராக பதவி வகுத்தார். தற்போது இவரின் மகன் குமாரசாமி தான் கர்நாடக முதல்வாரக உள்ளார்.

இந்நிலையில், தேவ கௌடா தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாகவும், வருகின்ற 2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத்தேர்தலில் கலந்துக்கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.