Advertisment

காங்கிரஸ் முழுநேர தலைவர் விவகாரம்: செயற்குழுவில் ட்விஸ்ட் வைத்த சோனியா காந்தி!

sonia gandhi

Advertisment

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், இன்று (16.10.2021) டெல்லியில் நடைபெற்றுவருகிறது. பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் உட்கட்சி மோதல், கட்சி தலைமை மீது மூத்த தலைவர்களின் அதிருப்தி என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த செயற்குழு கூடியது.

இந்த செயற்குழுவில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தான்தான் கட்சியின் முழுநேர தலைவர் என அதிரடியாக தெரிவித்துள்ளார். காங்கிரஸுக்கு முழுநேர தலைவர் இல்லாதது குறித்து ஜி-23 என்றழைக்கப்படும் மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களில் தேசிய பிரச்சனைகளில்தனது தலைமைத்துவத்தைச் சுட்டிக்காட்டி சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கட்சி தொடர்பான பிரச்சனைகளை ஊடகங்களிடம் பேசும் அதிருப்தி தலைவர்களை எச்சரிக்கும் விதமாக சோனியா காந்தி, "நான் எப்போதுமே வெளிப்படைத்தன்மையைப் பாராட்டியுள்ளேன். ஊடகங்கள் மூலமாக என்னுடன் பேச எந்த அவசியமுமில்லை. எனவே சுதந்திரமான மற்றும் உண்மையான விவாதத்தை மேற்கொள்வோம். ஆனால் இந்த அறையின் நான்கு சுவர்களுக்கு வெளியே சொல்லப்படுவது செயற்குழுவின் கூட்டு முடிவாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

alt="udanpirape " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e5fae87a-314f-4e8a-b5d5-d03fbf97a13a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_144.jpg" />

மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி, "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் நாம் நிறைய சவால்களைஎதிர்கொள்வோம். ஆனால் நாம் ஒற்றுமையாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்து கட்சியின் நலனில் மட்டும் கவனம் செலுத்துவோமேயானால், நாம் அத்தேர்தல்களில்சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

Rahul gandhi congress sonia gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe