
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லியில் உள்ள மம்தாவின் முன்னிலையில் ஹரியானா மற்றும் பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தனர்.
இந்தநிலையில் மம்தா பானர்ஜி இன்று, பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமியை இன்று சந்தித்தார். ஏற்கனவே மம்தா பானர்ஜி- சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு தொடர்பான தகவல் வெளியானவுடன், சுப்பிரமணியன் சுவாமி திரிணாமூல் காங்கிரஸில் இணையலாம் என யுகங்களும் வெளிவந்தன.
இந்தச்சூழலில் மம்தாவுடனான சந்திப்பிற்கு பின்னர் சுப்பிரமணியன் சுவாமியிடம், திரிணாமூல் காங்கிரஸில் இணைய போகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, "நான் ஏற்கனவே அவருடன்தான் (மம்தா) இருக்கிறேன். எனவே கட்சியில் சேர அவசியம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.