Advertisment

ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் அடுத்த திட்டம்...

hyundai

இந்தியாவின் இரண்டாவது பெரும்கார் ஏற்றுமதி மற்றும்உற்பத்தி நிறுவனமான,ஹூண்டாய் இந்தியாகார் தயாரிப்பு நிறுவனம் சென்னையில் தன் தொழிற்சாலையைத்தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்தியநிறுவனத்தின் சி.இ.ஓ. ஒய்.கே.கூ (Y.K.Koo)செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது"ஸ்ரீபெரும்புதூர்உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இதற்காக நிறுவனம் கூடுதலாக முதலீடும் செய்யப் போவது இல்லை.தற்போது சென்னை உற்பத்தி ஆலை மட்டும்7.13 லட்சம் கார்களை உற்பத்தி செய்கிறது. இதை 2019, முதல் அரையாண்டுக்குள் கூடுதலாக 37.000 கார்களை உற்பத்தி செய்து 7.50லட்சமாக உயர்த்தவும்திட்டமிடப்பட்டுள்ளது" என்றும்தீபாவளிக்குள் புதிய மாடல் காரையும் அறிமுகம் செய்யப்போவதாகவும் கூறினார். மேலும் இந்த ஆண்டுபண்டிகை காலங்களில் 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை விற்பனையில்வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறினார்.

இந்த ஜூன் 2018 வரைஇந்திய ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம்8 மில்லியன் கார்களை உற்பத்தி செய்துள்ளது. மேலும் வரும் 2021க்குள் உற்பத்தியை10 மில்லியனாய் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது". என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisment
car hyundai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe