ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி!

நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

HYDROCARBON PROJECTS PUDUCHERRY CM NARAYANASAMY PRESS MEET

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "மத்திய அரசாக இருந்தாலும், மத்திய அரசின் நிறுவனமாக இருந்தாலும் மாநிலத்தில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது. அதனை மத்திய அரசு புறக்கணித்து மாநில அரசுகளை உதாசீனம் செய்கிறது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

ஏற்கனவே இந்த திட்டத்திற்கு எதிராக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

cm narayanasamy Hydro carbon project Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe