ஸ்விக்கி செயலில் தான் ஆர்டர் செய்த உணவை இஸ்லாமிய பிரதிநிதி ஒருவர் கொண்டு வந்ததால் வாங்க மறுத்த நபர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
ஐதராபத்தில் ஒருவர் ‘ஸ்விக்கி’ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது இஸ்லாமிய வாலிபர் ஒருவர் அந்த உணவை கொண்டு சென்றுள்ளார். இதனால் அந்த உணவை வாங்க மறுத்த அந்த நபர், ஒரு இந்து மூலம் உணவை வழங்கும்படிஸ்விக்கி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ஸ்விக்கி நிறுவன பிரதிநிதி முடாசிர் சுலேமான் என்பவர் அந்த வாடிக்கையாளர் மீது காவல்துறையில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில், வழக்கு பதிவு செய்து விசரனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.