ஹைதராபாத்திலுள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.

Advertisment

two trains

இந்த ரயில் விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி மீட்புப் பணியாளர்களை வைத்து தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சிக்னல் கோளாறு காரணமாக 2 ரயில்களும் ஒரே நடைமேடையில் வந்த‌தால் இந்த விபத்து நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.