Advertisment

வரலாறு காணாத மழை... மூன்று நாட்களில் 30,000 குடும்பங்கள் பாதிப்பு!!!

hyderabad flood report

Advertisment

ஹைதராபாத்தில் வரலாறு காணாத கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 30,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின. சராசரியாக ஒரு மாதத்தில் பொழியவேண்டிய மழை அளவு ஒரேநாள் இரவில் பொழிந்ததால் அந்நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின. இதனைத்தொடர்ந்து சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின்போது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் மழையால் பலியானோர் எண்ணிக்கை 61 -ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், அக்டோபர் 13, 14, 17 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் 37,400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரம் கோடி வெள்ள செத்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளதாகவும் ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

telangana hyderabad
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe