மேம்பாலத்தில் இருந்து கார் ஒன்று கீழே விழுந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பரத்நகர் மேம்பாலத்தில் சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்துள்ளது. இதில் காரில் பயணம் செய்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். வாகனம் விழுந்த இடத்தில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment
Advertisment

வாகன ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கார் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.