A husband willing to sacrifice a child in karnataka

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் துன்புறுத்துவதாகவும், அமானுஷ்ய சடங்கில் தனது குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

Advertisment

தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கொரியர் கம்பெனியில் பாதிக்கப்பட்ட பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அந்த கம்பெனியில் வேலை பார்த்த சதாம் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் நம்பிக்கையை பெறுவதற்காக தன்னை ஒரு இந்து மனிதரான ஆதி ஈஸ்வர் என்று அறிமுகப்படுத்தி, அந்த பெண்ணிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர்களது பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது.

Advertisment

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும், இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள சதாம் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். மேலும், அவர் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு மனைவியின் பெயரை மாற்றுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில், மனைவி கர்ப்பமான போதும், அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, தம்பதி மகன் பிறந்ததை தொடர்ந்து, சதாமின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சதாம் இரவில் மந்திரங்களை உச்சரிப்பது உட்பட அமானுஷ்ய நடைமுறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு ஒரு கட்டத்துக்கு மேலே சென்று,சூனியம் என்ற பெயரில் பூஜை செய்து குழந்தையை பலி கொடுத்தால் அதிக செல்வம் வளரும் என்று தனது மனைவியை பலமுறை மிரட்டி வந்துள்ளார்.

இதில் பயந்து போன, அந்த பெண் தனது குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு சென்றாலும், பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தியும், பெண்ணின் தாயை அச்சுறுத்தியும் வந்துள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண், நடந்த சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment