The husband who spread the video at wife with boyfriend

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் தனது கணவர் பேரில் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த பெண், தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரவியதை தொடர்ந்து, தனது கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

Advertisment

அந்த பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பெண்ணின் கணவர், வீட்டில் ஸ்பை கேமரா மறைத்து வைத்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் தனது ஆண்நண்பரை வீட்டிற்கு வரவழைத்து உறவில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

கேமராவில் பதிவான அந்த காட்சிகளை பெண்ணின் கணவர் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.