Advertisment

மனைவியின் மீது சந்தேகம்; கொடூரமாகக் கொலை செய்த கணவர்

 husband who brutally incident his wife

Advertisment

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் கத்தியால் குத்திக்கொடூரமாக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு தேவனஹள்ளி அருகே வசித்து வருபவர்கள் முனி ஆஞ்சனேயா மற்றும் ரஜனி தம்பதியினர்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் முனி ஆஞ்சனேயா ரஜனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்குஇடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முனி ஆஞ்சனேயா அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவி ரஜனியை சரமாரியாகக் குத்தியுள்ளார். அதன் பின்பு ஆஞ்சனேயா அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஜனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பெற்று வந்த ரஜனி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார், கணவர் முனி ஆஞ்சனேயா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,மேல் வீட்டில் வசிக்கும் இளைஞருடன் ரஜனி நெருங்கிப் பழகி வந்ததால் அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் சண்டை போட்டு வந்துள்ளார். அந்த வகையில் நடைபெற்ற சண்டையில்தான் ரஜனியை அவர் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள முனி ஆஞ்சனேயாவை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

Bengaluru police wife
இதையும் படியுங்கள்
Subscribe